அவன் வருவானா? (சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
சென்ற மாதம் இதேநாளில் தோரணமும், வாழை மரங்களும் வாயிலை அலங் கரிக்க மகிழ்ச்சித் துள்ளாட்டம் போட்ட அந்த வீட்டில், இன்று மௌனமும் சோகமும் குடிகொண்டிருந்தன. நடராஜன் தன் ஒரே மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்த பின்னும் நிம்மதியில்லாமலிருந்தார்.
வானவேடிக்கைகளால் வானத்தில் அவ்வப்பொழுது சூரியனும் மின்னல்களும் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. தீபங்களின் தெய்வீகமான ஒளியில் வீடுகள் கோவில்களாக மாறியிருந்தன. ஆனால் அந்த தீப ஒளித்திருநாளில் நடராஜனின் மனதை சோகத்தின் இருள் கவ்வியிருந்தது. தலைதீபாவளி யைக்கொண்டாட தன் மருமகன் வருவான் என்று காத்திருந்தவருக்கு, தன் மகள் மட்டும் சோர்ந்த முகத்துடன் வீடு திரும்பியது அவரை சங்கடப்படுத்தியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/investegative.jpg)
திருமணம் முடிந்த நாளிலிருந்தே தன் கணவரிடம் மகிழ்ச்சி குறைந்திருந்ததை அவளால் காணமுடிந்தது. அவருடைய அலுவலகப் பணியினால் உண்டான சுமையாயிருக்கும் என்று நம்பி ஏமாந்தாள். ஆனாலும், தன் கணவர் தன்னிடம் எதையோ மறைக்கிறார் என்று அவள் உள்ளு ணர்வு எச்சரித்தது. தான் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும், தன்னால் தீபாவளியன்று வரமுடியாதென்றும் சொல்லிவிட்டு, பதிலுக் காகக் காத்திருக்காமல் நடையைக் கட்டினான்.
தன் மகள் சொன்ன சேதிகளைப் பொறுமை யுடன் கேட்ட நடராஜனுக்கு மணமகனிடம் ஏதோ பிரச்சினை இருப் பது தெளிவானது. தன் மகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதை கவன மாகக் கையாளவேண்டு மென்ற முடிவுக்கு வந்தார்.
ஒரு ஜோதிடரை அணுகி இதில் புதைந்திருக் கும் ரகசியத்தையறிந்து பரிகாரம் தேட விரும்பினார்.
நடராஜன் தன் மகளின் எதிர்காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்திருப்பதையும், நடந்த சம்பவங்களையும் முழுவதுமாக. கிருஷ்ணன் நம்பூதிரியிடம் தெரிவித்தார்.
கிருஷ்ணன் நம்பூதிரி: திருமணத்திற்கு முன் மணமக்களின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தபின் திருமணத்தை நிச்சயம் செய்தீர்களா?
நடராஜன்: ஜோதிடரி டம் ஜாதகப் பொருத்தம் பார்த்தப்பின்தான் திருமணத்தை உறுதி செய்தோம். ஆனாலும் இதுபோன்ற எதிர்பாராத துன்பம் நிகழ்ந்துவிட்டது.
கிருஷ்ணன் நம்பூதிரி: நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதோடு தங்கள் கடமை முடிந்ததாகக் கருதும் பெற்றோர் கள் இருக்கும்வரை இதுபோன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வராது. திருமணத்தைக் கண்ணும் கருத்துமாய் பிரம் மாண்டமாக நடத்த வேண்டுமென்று எண்ணு பவர்கள், மணமக்களின் ஒழுக்கத்தைப்பற்றி ஜோதி டரிடம் ஆலோசனை பெறுவதில்லை.
அதற்கான பொறுமையும் இருப்பதில்லை. மணமக்களுக்கு வசியப் பொருத்தமில்லா விட்டாலும் பாதகமில்லை என்ற எண்ணத் திற்கு வந்துவிடுவதால், பரஸ்பர நெருக்கம் குறைந்து விடுகிறது. ஜாதகப் பொருத்தம் பார்ப்பது வெறும் சடங்காகிவிட்டது. அது தான் திருமண வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது புரிவதில்லை. வீட்டுக்குள் இருள் இருக்கும்போது ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் ஆடம்பரத் தால் பயனேதுமில்லை. மணமகனின் சொத்து விவரங்களை கேட்டறிவதிலுள்ள ஆர்வம் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்து கொள்வதில் இல்லை. அதனால், மணவாழ்க்கை அஸ்திவாரம் சரியில்லாத கட்டடம்போல் ஆட்டம் காணும். கண் கெட்டபின் சூரியனை வணங்குவதால் பயன் ஒன்றுமில்லை. ஏதாயிருந்தாலும், முதலில் பிரசன்ன ஆருடத்தின்மூலம் ரகசியத்தைக் கண்டறிவோம்.
சோழிப் பிரசன்ன லக்னத்தில்- ஆண் கிரகமாகிய செவ்வாய் வக்ரமடைந்து ஏழாம் பார்வையாக, கன்னியில் பெண் கிரகமாகிய சுக்கிரன்மீது விழுவது, மணமக்களின் அன்பில் விரிசல் விழுந்ததையும், மணப்பெண் கல்யாணமாகியும் கன்னியாகவே இருக்கிறாள் என்பதையும் தெளிவாக்குகிறது.
காலபுருஷனின் 12-ஆம் பாவம் சோழிப் பிரசன்ன லக்னமாக அமைவது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
நீசச் சுக்கிரன் கன்னியில் இருக்க, சுக்கிரனின் காளை வீட்டில் (ரிஷபம்) ராகு இருப்பது, மணமகன் மரபுமீறிய உறவில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.
பிரசன்ன லக்னத்தில் சனி அமர்ந்து கடகத்தைப் பார்ப்பது, விரக்தியையும் மனவேதனையையும் காட்டுகிறது.
நவாம்சத்தில் சுக்கிரனும், ராகுவும் கன்னியில் சேர்வது, மணமகனுக்கு வேறு பெண்ணுடன் ரகசிய நெருக்கம் இருப்பது புலனாகிறது.
பிரசன்ன லக்னத்தின் ஏழாம் அதிபதியாகிய சந்திரன் விருச்சிகத்தில் மறைவதும், மணமகனின் மனதில் மறைமுகமாக வேறுபெண்ணின் நினைவு இருப்பதையும் காட்டுகிறது.
நடராஜன்: மணமகன் வீட்டாரைப்பற்றி நன்கு விசாரித்தப்பின்தான், இந்தத் திருமனத் திற்கு ஒப்புக்கொண்டோம். இவ்வாறான ரகசியங்கள் ஒளிந்திருக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்?
கிருஷ்ணன் நம்பூதிரி: பெற்றோரைக் கொண்டு பிள்ளைகளின் குணக்கோளாறை அறியமுடியாது. மணமகனின் குணநலனைப் பற்றி ஜோதிட ஆலோசனைப் பெற்றிருந் தால், இந்தநிலை ஏற்பட்டிருக்காது. ஜனன ஜாதகத்தில் அமைந்துள்ள காமத் திரிகோணத்தின் தொடர்பைக்கொண்டே ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையைக் கண்டுபிடித்துவிடமுடியும். நவீனயுகத்தில் நல்லவர்களைத்தேடிக் கண்டுபிடிப்பது கடினம்தான். கோவலனும், மாதவியும் இருக்கும்வரை கண்கலங்கும் கண்ணகியும் இருக்கத்தான் செய்வார்கள்.
நடராஜன்: என் மகளின் திருமண வாழ்க்கை சீராகுமா? மருமகன் திருந்தி விடுவாரா? அதற்கான பரிகாரம் உள்ளதா?
கிருஷ்ணன் நம்பூதிரி: உங்கள் மருமகனின் ஜாதகத்தைப் பரீசிலனை செய்த பின்புதான் அதை அறியமுடியும்.
(புலனாய்வு தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/investegative-t.jpg)